காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
ஞாலத்தில் பரனுனை நாட்டின் நோக்கத்தைச்
சலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்

1. மதியை யிழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் இரட்சண்ய வாழ்வைக் கண்டு நீ மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ? -காலத்தின்

2. இகத்தினில் ஊழியம் அகத்தியம் நிறைவேற
இயேசுனை அழைத்தாரல்லோ
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்காலமுடியும் இராக்காலத்திலென்ன செய்வாய்? -காலத்தின்

3. முந்தி எரேமியா அனனியாவுக் குரைத்த
முடிவை நீ யறியாயோ!
எந்தக்காலமும் சிரஞ்சவியென் றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ -காலத்தின்



kalaththin arumaiyai arinththu vazhavidil

kalaththin arumaiyai arinththu vazhavidil
kanneer viduvaye
njalaththil paranunai naddina nokkaththais
salamay ninaithdhavar mulam bizhaiththiduvay

1. mathiyai yizhanththu dhaya vazhiyile nee natanththal
varungkopam arinththidayo?
kathiyam iradchanya vazhvaik kandu nee makiznththita
kalam ithuve nalla kalam enrariyayo? -kalaththin

2. ikaththinil uuzhiyam akaththiyam niraivera
iyesunai azhaiththarallo
makaththuva velaiyai maranththu thungkuvayanal
pakarkalamudiyum irakkalaththilenna seyvay? -kalaththin

3. munththi eremiya ananiyavuk kuraithdha
mudivai nee yariyayo!
enthdhakkalamum siranjchaviyen rennidamal
eerra aayathdhamay eppothum irunththidayo -kalaththin